நாகை மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. உழவனுக்கு உற்ற நண்பனாக விளங்கும், மாடுகளுக்கு நன்றி செலுத்தும் திருநாளாக மாட்டுப்பொங்கல் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
இதனை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம், பூவைத் தேடி கிராமத்தில் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளைத் தண்ணீரில் குளிப்பாட்டி, நெற்றியில் மஞ்சள், குங்குமத் திலகமிட்டு, பின் பொங்கலிட்டு மாடுகளுக்கு பூஜை செய்தும் பொங்கலோ பொங்கல் எனக் கூறியும் கொண்டாடினர்.
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட்-30 செயற்கைக்கோள்
அதனைத் தொடர்ந்து அருகிலுள்ள வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளை ஒன்றாகச் சேர்த்து, மாடுகள் முன் கேக் வெட்டி அதனை மாடுகளுக்கு ஊட்டிவிட்டும் உற்சாகமாகவும் வித்தியாசமாகவும் மாட்டுப் பொங்கலை கிராம மக்கள் கொண்டாடினர்.