ETV Bharat / state

செப்பனிடாத தார் சாலை.. தப்பு அடித்து சங்கு ஊதி நூதனப் போராட்டம்!

author img

By

Published : Mar 3, 2021, 9:35 AM IST

மயிலாடுதுறை: தார் சாலையை செப்பனிடாத குத்தாலம் ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தப்படித்து சங்கு ஊதி நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

Marxist Communist Party protest
தப்பு அடித்து சங்கு ஊதி நூதன போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பருத்திகுடி ஊராட்சியில் பரமசிவபுரம் முதல் பருத்திக்குடி வரை குண்டும் குழியுமாக இருந்த தார் சாலையை புதிதாக அமைப்பதற்காக ரூபாய் 90 லட்சம் மதிப்பீட்டில் கடந்த ஆண்டு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

கப்பிகற்கள் பரப்பிய நிலையில் சாலை போடாமல் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் கிராம மக்கள் தினந்தோறும் பெரும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். கிடப்பில் போடப்பட்ட சாலையை செப்பனிடக் கோரி பருத்திக்குடி ஊராட்சி பகுதியில் தப்பு அடித்து சங்கு ஊதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தப்பு அடித்து சங்கு ஊதி நூதன போராட்டம்

சாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்காத குத்தாலம் ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின், ஒன்றிய செயலாளர் விஜயகாந்த், மாவட்ட குழு பாஸ்கரன் ஆகியோர் ஒன்றிய குழு முரளி தலைமையில் கண்டன உரையாற்றினர். கிராம மக்களின் நலன் கருதி உடனடியாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பாம்பன் சாலைப் பாலத்தில் மின்கசிவால் தீ விபத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.