வன்னியர் சமூகத்திற்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு கோரி கடந்த 29 ஆம் தேதியன்று மயிலாடுதுறையில் வன்னியர் சங்கத்தினர் பேரணியாக சென்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்து மயிலாடுதுறை ஏவிசி திருமண மண்டபம் முன்பாக தடுப்புகளை ஏற்படுத்தி அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அப்போது வன்னியர் சங்கத்தினர் தடுப்புகளை அகற்றி முன்னேறி சென்றனர். தடுப்பு ஏற்படுத்தி இருந்த இடத்தில் நின்ற லாரியின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்துள்ளனர்.
இதுகுறித்து லாரி உரிமையாளர் சார்லஸ் (60) என்பவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,
மயிலாடுதுறை அருகே உள்ள கடுவங்குடியை சேர்ந்த வன்னியர் சங்க பிரமுகர் ராஜகோபால் மகன் கோவிந்தன் (35) என்பவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் ரவுடி வெட்டிக் கொலை: 4 பேர் கைது!