மயிலாடுதுறை: கோயில்கள், வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. அதைத் தொடர்ந்து போலீசார் மற்றும் குடியிருப்பு வாசிகள் சிசிடிவி கேமராக்களை ஆங்காங்கே பொருத்தி வைத்தும். கொள்ளைச் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவது வழக்கமாக இருக்கிறது.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள இரண்டாம் நம்பர் புதுத்தெருவில் ஸ்ரீ மகாகாளியம்மன் கோயில் உள்ளது. தற்போது நள்ளிரவு 2.30 மணிக்கு அளவில் மகா காளியம்மன் கோயில் வாசலில் உள்ள உண்டியலின் பூட்டை இரண்டு மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் உடைத்துள்ளனர். சத்தம் கேட்டு அருகிலிருந்த குடியிருப்பு வாசிகள் வந்துள்ளனர். அவர்கள் இதனால் மர்ம நபர்கள் உண்டியலில் உள்ள பாதி பணத்தை மட்டும் அள்ளிக்கொண்டு அருகில் உள்ள இருட்டான பகுதியினுள் பதுங்கியுள்ளனர்.
மேலும் திருடர்கள் பதுங்கிய இடத்தில் ஏராளமான காயின்களை விட்டுச் சென்றுள்ளனர். அதன் பின்னர் அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த மயிலாடுதுறை போலீசார் கோயில் மற்றும் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். தற்போது இதே மகா காளியம்மன் கோயிலில் உள்ள இந்த உண்டியல் ஐந்தாவது முறையாக உடைக்கப்பட்டு திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.