கரோனா ஊரடங்கு காலத்தில் சீர்காழி லாரி உரிமையாளர்கள் அரசு உத்தரவை ஏற்று தங்கள் லாரிகளை இயக்காமல் நிறுத்திவைத்திருந்தனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இயக்கப்படாத லாரிகளுக்கும் சாலை வரி செலுத்த வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை, எதிர்த்து லாரி உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் முருகன் வெங்கடாச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இதன், தீர்ப்பு அக்டோபர் 12ஆம் தேதி வெளியானது. அதில், ‘ஓடாமல் நிறுத்தியிருந்த வாகனங்கள் குறித்து லாரியின் உரிமையாளர்கள், நிறுத்த அறிக்கை (Stoppage form) நகல் வாங்கி எழுதித்தர வேண்டும்’ எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், அரசு அக்டோபர் 29ஆம் தேதி பிறப்பித்த ஆணையில் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் அனைத்து லாரிகளும் சாலை வரியை செலுத்த வேண்டும் எனக் கூறியிருந்தது.
கரோனா காலத்தில் வாகனங்களை இயக்காமல் இருந்த ஓட்டுநர்களுக்கு இந்த ஆணை பேரிடியாக அமைந்துள்ளது. இது குறித்து, சீர்காழி லாரி உரிமையாளர் சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வந்து போக்குவரத்து ஆய்வாளர் ராம்குமாரிடம் நிறுத்த அறிக்கை வாங்கிக்கொண்டு, சாலை வரிக்கு விலக்கு அளிக்கக் கோரி மனு அளித்தனர்.
இதையும் படிங்க: வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடி: நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு