மயிலாடுதுறை : எலந்தங்குடியைச்சேர்ந்த ஹாஜா மைதீன் - ரஷியா ஜாஸ்மின் தம்பதியின் மகன் ஹசிப் (4). இந்த சிறுவன் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஹாஜா மைதீன் தனது திருமணத்தன்று திருமண கூட்டத்திலேயே ரத்ததான முகாம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், அவர்களது மகன் ஹசிப் வீட்டில் பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட வாட்டர் பாட்டில் மூடிகளைக் கொண்டு, பிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் கலைப்பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
அந்த வயதுக்கு உரிய சிந்தனையோடு மண், மரம், இலைகள், பூக்கள், வானம், சூரியன் ஆகியவற்றை பிளாஸ்டிக் மூடிகளைக் கொண்டு அச்சிறுவன் உருவாக்கியுள்ளார். இன்று ஹசிப் தனது 4ஆவது பிறந்த நாளைக்கொண்டாடிய நிலையில், தான் உருவாக்கிய கலைப்பொருளை தான் பயிலும் பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினார். மேலும் அனைத்து மாணவர்களுடன் இனிப்பு வழங்கி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
இதையும் படிங்க: ஆளுநரை திரும்பப்பெறாவிட்டால் போராட்டம் - எச்சரித்த சுப.வீ