எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து, எல்.ஐ.சி ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். லாபத்தில் இயங்கும் எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் பொதுத்துறை நிறுவனத்தை அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக ஊழியர்கள் குற்றஞ்சாட்டினர்.
பின்னர், மயிலாடுதுறை எல்.ஐ.சி. அலுவலக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும், மத்திய அரசு இந்த முடிவை மாற்றிக்கொள்ளாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: பால்வளத்துறை திட்டங்கள் - முதலமைச்சர் ஆலோசனை