மயிலாடுதுறை அருகே ஆனைமேலகரம் ஊராட்சி மல்லியம் கிராமம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் வளர்த்து வந்த ஆடு இரண்டு குட்டிகளை ஈன்றது. அதில் ஒரு குட்டி மனித உருவில் இருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதேசமயம் பிறந்து சிறிது நேரத்திலேயே அந்த ஆட்டுக்குட்டி இறந்து போனது. இறந்துபோன ஆட்டுக்குட்டிக்கு மனிதனைப் போன்ற முகம், கைகள், வாய் போன்ற அமைப்பு இருந்தது.
இதனை அறிந்த மல்லியம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் மனித உருவில் பிறந்து இறந்த ஆட்டுக்குட்டியை ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர். ஆட்டுக்குட்டியை அக்குடும்பத்தினர் புதைத்து விட்டனர். இறந்துபோன ஆட்டுக்குட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.