ETV Bharat / state

கொள்ளிடம் கூட்டு குடிநீர் அனைத்து நாள்களிலும் கிடைக்க கோரிக்கை!

நாகை: சீர்காழி அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் தண்ணீர் தங்களுக்கு அனைத்து நாள்களிலும் கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளிடம் கூட்டு குடிநீர்  கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம்  நாகை கொள்ளிடம் கூட்டு குடிநீர்  Kollidam Drinking Water  Kollidam Drinking Water Project  Nagai Kollidam Drinking Water Project
Kollidam Drinking Water
author img

By

Published : May 2, 2020, 10:58 AM IST

நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகேயுள்ள தில்லைவிடங்கன் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கிராமத்தில் நிலத்தடி நீர் உப்பாக மாறிவிட்டதால் அதனை பயன்படுத்த முடியாது. இதனால், கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் தண்ணீர் வாரத்திற்கு இரண்டு நாள்கள் மட்டுமே வருகிறது. அதுவும் ஒரு மணி நேரம் மட்டும் வருகிறது. மற்ற நாள்களில் பொதுமக்கள் மிதிவண்டியில் குடங்களை கட்டிக்கொண்டு அடுத்த கிராமத்திற்குச் சென்று தண்ணீர் தேடி அலைந்து வருகின்றனர். தற்போது, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் வெளியே சென்று தண்ணீர் எடுப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் போதிய தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இது குறித்து அக்கிராமத்தினர் கூறுகையில், " இக்கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட தெருக்கள் இருந்தும் அனைத்து தெருக்களுக்கும் சேர்த்து ஒரே இடத்தில் குழாய் வைத்து தண்ணீர் பிடிக்க விடுகின்றனர்.

கொள்ளிடம் கூட்டு குடிநீர்  கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம்  நாகை கொள்ளிடம் கூட்டு குடிநீர்  Kollidam Drinking Water  Kollidam Drinking Water Project  Nagai Kollidam Drinking Water Project
மிதி வண்டியில் தண்ணீர் எடுத்துச் செல்லும் மக்கள்
தண்ணீர் தேடி அலையும் கிராம மக்கள்

இதனால், கூட்டம் அலைமோதுகிறது. எனவே அந்த அந்தத் தெருவுக்கு மக்கள் பயன்படுத்தும் வகையில் குடிநீர் குழாய் அமைத்து நோய்த் தொற்று ஏற்படாமல் வாரம் முழுவதும் தொடர்ந்து தண்ணீர் வழங்க வேண்டும்" என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:ஊரடங்கு உத்தரவு மீறல்: 1500க்கும் மேற்பட்டோர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.