ETV Bharat / state

எழுவர் விடுதலை: ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை... அரசு மீது கொளத்தூர் மணி காட்டம் - திவிக கொளத்தூர் மணி

நாகை: ராஜீவ் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பாக ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் தரவில்லை என்று கொளத்தூர் மணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

kolathur mani
author img

By

Published : Oct 8, 2019, 7:46 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில், பெரியாரியல் பயிலரங்கம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன், தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் பங்கேற்று பேசினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் மணி, "தனிமனிதர்கள் மீதான தாக்குதல் மதத்தின் பெயரால் நடத்தக்கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தேசத்தந்தை காந்தியை கொலை செய்த கோட்சேவை புகழ்ந்து தமிழ்நாட்டின் கோட்சே ஹெச்.ராஜா என்று போஸ்டர் ஒட்டப்படுகிறது. எது தேச துரோகம் என்று தெரியாத நிலை உள்ளது.

கொளத்தூர் மணி செய்தியாளர் சந்திப்பு

கீழடியில் கிடைத்துள்ள அகழ்வாராய்ச்சியின் மூலம், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் நகர நாகரீகம் வெளியே தெரிந்துள்ளது. இந்த அகழாய்வைத் தொடர்ந்து நடத்துவதற்கு மத்திய அரசு விரும்பவில்லை. எனவே, தமிழ்நாடு தொல்லியல்துறை மூலம், கீழடி ஆய்வைத் தொடர்ந்து நடத்தி அங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.

அதேநேரம், பூம்புகார், ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு உள்ளிட்ட இடங்களிலும் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புகளில், பிற மாநிலத்தவர்கள் பங்கேற்கலாம் என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவு திரும்பப்பெற வேண்டும்.

காந்தி பிறந்த நாளில், பல சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டபோது கூட, ராஜீவ் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படவில்லை. இதுகுறித்து, சட்டசபையில் தீர்மானம் இயற்றி 400 நாட்களைக் கடந்த பிறகும், 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை விடுவிக்க தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு அழுத்தம் தரவில்லை. மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: தேசிய கீதத்தைத் தமிழில் பாடிய ஆசிரியை: வைரலாகும் வீடியோ!

Intro:மணிரத்தினம் உள்ளிட்டோர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்தது தவறு, கீழடியில் அகழ்வாராய்ச்சியை தொடரும் நேரத்தில், பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மயிலாடுதுறையில் கொளத்தூர் மணி பேட்டி:-Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில், பெரியாரியல் பயிலரங்கம் இன்று நடைபெற்றது. அக்கட்சியில் பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன், தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் பங்கேற்று பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் மணி, தனிமனிதர்கள் மீது தாக்குதல் மதத்தின் பெயரால் நடத்தக்கூடாது என்று கடிதம் எழுதியதற்காக இயக்குனர் மணிரத்தினம் உள்ளிட்டோர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளை கொன்ற கோட்சேயை புகழ்ந்து தமிழகத்தின் கோட்சே என்று ஹெச்.இராஜாவிற்கு போஸ்டர் அடிக்கப்படுகின்றது. எது தேச துரோகம் என்று தெரியாத நிலை உள்ளது. கீழடியில் கிடைத்துள்ள அகழ்வாராய்ச்சியின் மூலம், 2ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தமிழ் நகர நாகரீகம் வெளியே தெரிந்துள்ளது. இதனை தொடர்வதற்கு மத்திய அரசு விரும்பவில்லை. தமிழக தொல்லியல்துறை மூலம், கீழடி ஆய்வை தொடர்ந்து, அங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். அதே நேரம், பூம்புகார், ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு உள்ளிட்ட இடங்களில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் வேலைவாய்ப்புகளில், பிற மாநிலத்தவர் பங்கேற்கலாம் என்ற தமிழக அரசின் உத்தரவு திரும்பப்பெற வேண்டும். இதனால், பணிகள் பாதிக்கபடுவதுடன், வேலைவாய்ப்பிற்கு காத்திருக்கும் இளைஞர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். காந்தி பிறந்த நாளில், சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டபோது கூட, இராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படவில்லை. இது குறித்து, சட்டசபையில் தீர்மானம் இயற்றி 400நாட்களை கடந்த பிறகும், 28ஆண்டுகளாக சிறiயில் உள்ளவர்களை விடுவிக்க தமிழக அரசு ஆளுநருக்கு அழுத்தம் தரவில்லை. உடனடியாக அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

பேட்டி: கொளத்தூர் மணி – திராவிடர் விடுதலைக்கழகம்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.