காவிரியை தூய்மைப்படுத்த வலியுறுத்தி அகில பாரத துறவியர்கள் சங்க செயலாளர் இராமானந்தா தலைமையில், 50-க்கும் மேற்பட்ட துறவியர்கள் காவிரி உற்பத்தியாகும் குடகு மலையிலிருந்து பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த மாதம் 21ஆம் தேதி குடகு மலையிலிருந்து புறப்பட்ட பாதயாத்திரை நாகை மாவட்டம் மயிலாடுதுறையை வந்தடைந்தது. இந்தப் பாதயாத்திரையை வரவேற்று மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் காவிரி தாய்க்கு சிறப்பு ஆரத்தி வழிபாடு நடைபெற்றது.
துறவியர்கள், பூசாரிகள், ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து காவிரி தாயை வழிபட்டனர். இதில் கலந்துகொண்ட அகில பாரத துறவியர்கள் சங்க செயலாளர் இராமானந்தா காவிரியில் பொதுமக்கள் சாக்கடை கழிவுநீர், குப்பைகளைக் கலக்காமல் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதையும் படிக்க: ஆயிரமாண்டுகள் பழமையான 'பதிமலை குகை' ஓவியங்களைப் பாதுகாக்க மக்கள் கோரிக்கை!