மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதியில் உள்ள பொறையாறு அரண்மனை தெருவில் உள்ளவர், அதிமுக பிரமுகரான பார்த்திபன்.
அதே பகுதியைச் சேர்ந்த சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து அதிமுகவில் இணைந்தவர், அருணாச்சலம். இவர்கள் இருவரது வீட்டில் நேற்றிரவு(ஏப்ரல் 2) பீர் முகைதீன் தலைமையில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில், தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து அதிமுகவில் இணைந்த ஜனார்த்தனம் என்பவரது வீட்டில் 3 மணி நேரம் சோதனையிட்டனர்.
அங்கு, சோதனை முடிவில் பணம், ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. இதனையடுத்து, வருமானவரித்துறை அலுவலர்கள் திரும்பி சென்றனர். அதிமுகவினரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'நீ ஜெய்ச்சுருவ'- திமுக வேட்பாளரின் தலையில் திருநீறு அடித்த பூசாரி