ETV Bharat / state

ஐந்து ஆண்டுகளாக சாலையில் வீணாகும் குடிநீர்; மக்கள் வேதனை!

நாகை: மயிலாடுதுறையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சாலையில் குடிநீர் வழிந்தோடி வீணாவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஐந்து ஆண்டுகளாக குடிநீர் சாலையில் வீணடிப்பு; மக்கள் வேதனை!
author img

By

Published : Jun 11, 2019, 11:27 PM IST

நாகை கொள்ளிடம் ஆற்றில் பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு போர்வெல் மூலம் குழாய்கள் வழியாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.

மயிலாடுதுறைக்கு வரும் குடிநீர் குழாயில் திருவிழந்தூர் மெயின் ரோட்டில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் சாலையில் வழிந்தோடி வீணாவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஐந்து ஆண்டுகளாக சாலையில் குடிநீர் வீணடிப்பு; மக்கள் வேதனை!

இது குறித்து மயிலாடுதுறை நகராட்சியிடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கஜா புயலுக்கு பின் மழை இல்லாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குடிநீர் வீணாக்கப்படுவதாகவும், சாலைகளில் தண்ணீர் தேங்கி பள்ளம் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Intro:மயிலாடுதுறையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் அடிக்கடி ஏற்படும் அடைப்பால் 5 ஆண்டுகளுக்கு மேலாக சாலையில் வழிந்தோடும் குடிநீர். பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொது மக்கள் குற்றச்சாட்டு:-

Body:கொள்ளிடம் ஆற்றில் பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு போர்வெல் மூலம் குழாய்கள் வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, நாகப்பட்டினம், வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறைக்கு வரும் குடிநீர் குழாயில் திருவிழந்தூர் மெயின் ரோட்டில் உடைப்பு ஏற்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் சாலையில் வழிந்தோடுகிறது. மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகத்தினர் உடைப்பை பேரளவிற்கு மட்டும் சரி செய்வதால் மீண்டும், மீண்டும் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதாகவும், கஜா புயலுக்கு பின் மழை இல்லாமல் குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் குடிநீர் வீணாக சாலையில் வழிந்தோடுகிறது. சாலைகளில் தண்ணீர் தேங்கி பள்ளம் ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாகவும், இது குறித்து தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாகவும், பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். உடனடியாக உடைப்பை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி :- 01, வேதவள்ளி- திருவிழந்தூர்,
02, பிரகாஷ் - திருவிழந்தூர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.