அகில பாரத இந்து மகா சபாவின் ஆலய பாதுகாப்புப் பிரிவின் மாநில தலைவர் வேலன், அந்த இயக்கத்தின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், "மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயில், திருவிழந்தூர் பரிமள ரங்கநாதர் கோயில், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில், நவகிரக கோயில்களான சூரியன், சுக்கிரன், ராகு கோயில்கள் ஆகிய கோயில்களில் விரைந்து திருப்பணி செய்து, குடமுழுக்கு நடத்திட வேண்டும்.
மேலும், கும்பகோணம் மகாமகத்தின்போது வெளி மாவட்ட மக்கள் 12 கோயில்களுக்கும் சென்று வழிபட முடியாத நிலை உள்ளது. எனவே, வரும் மகாமகத்திற்கு குளத்தைச் சுற்றியுள்ள 12 மண்டபங்களைச் சீரமைத்து கும்பேஸ்வரர், பாணபுரீஸ்வரர், காசி விஸ்வநாதர், சோமேஸ்வரர், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடீஸ்வரர், அபிமுகேஸ்வரர், கௌதமேஸ்வரர் உள்ளிட்ட 12 சுவாமிகளையும் எழுந்தருளச் செய்து தீர்த்தம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்தை வரவேற்கும் இந்து முன்னணி