நாகை: மயிலாடுதுறை அருகேயுள்ள மணல்மேடு முட்டம் பாலத்தில் இருசக்கர வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மணல்மேடு முட்டம் பாலத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்பரண் வழியே ஒரே நேரத்தில் காரும் பைக்கும் வந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த மூன்றுபேர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் இருவரையும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த செல்வம்(30), புருஷோத்தமன்(25) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த கோவிந்தராஜுக்கு தற்போது தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் தடுப்பரண் வைத்துள்ள இடத்தில் இரவில் போதிய வெளிச்சல் இல்லாததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இலங்கை கடற்படை உதவியுடன் நாகை திரும்பிய மீனவர்கள்