தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் அரசு பேருந்து சேவை இன்று முதல் தொடங்கியது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து கோமலுக்கு சென்ற அரசு பேருந்து, தொழுதாலங்குடி பகுதியில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த தேரிழந்தூரை சேர்ந்த ரத்தினம் (60), காவ்யா(17) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
ரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். பள்ளி மாணவி காவ்யா(17) மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து குத்தாலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மாணவி காவ்யா, ரத்தினத்தின் தங்கை மகள் என்பதும், அவர்கள் இருவரும் சுப நிகழ்ச்சிக்கு சென்றபோது இவ்விபத்து நடந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இதையும் படிங்க: நாமக்கல் ரயில் தண்டவாளத்தில் கிடந்த ஆணின் உடல்: கொலை என போலீஸ் சந்தேகம்!