ETV Bharat / state

யூடியூபர் நாகை மீனவன் படகில் 280 கிலோ கஞ்சா பறிமுதல் - நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பிரபல யூடியூபரான 'நாகை மீனவன்' என்பவரது படகில் இருந்து 280 கிலோ கஞ்சாவை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

யூடியூபர் நாகை மீனவன் படகில் 280 கிலோ கஞ்சா பறிமுதல்

author img

By

Published : Sep 27, 2021, 10:54 PM IST

நாகப்பட்டினம்: நாகை துறைமுகத்தில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் சுங்கத்துறை ஆணையர் செந்தில்நாதன் தலைமையில் 15 பேர் கொண்ட குழு, நேற்று இரவு (செப்.26) கடலோர பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தியது.

அலுவலர்கள் வருவதை பார்த்ததும் அந்த நபர்கள் படகையும், இரு சக்கர வாகனங்களையும் அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர்.

யூடியூபர் நாகை மீனவன் படகில் 280 கிலோ கஞ்சா பறிமுதல்

பின்னர் படகில் ஏற்றப்பட்டிருந்த 10 மூட்டைகளை சோதனையிட்டதில் 280 கிலோ எடைகொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.

காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கஞ்சா ஏற்றப்பட்ட படகு பிரபல யூடியூபர் 'நாகை மீனவன்' என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஹைதராபாத் கனமழை: கழிவுநீர் ஓடையில் அடித்துச் செல்லப்பட்டவர் உடல் கண்டெடுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.