ETV Bharat / state

நாகை மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் - மீனவர்கள் அச்சம்! - Black stone wall

நாகை: சந்திரப்பாடி மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக, கடல்நீர் உட்புகுந்து வருவதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

நாகையில் கடல் சீற்றம் மீனவர்கள் அச்சம்  கடல் சீற்றம்  சந்திரப்பாடி மீனவ கிராமம்  புயல்கூண்டு  கருங்கல் தடுப்பு சுவர்  ஆம்பன் புயல்  Furious Sea In Nagapattinam  Furious Sea  Ambon Storm  Black stone wall  Storm Cage
Furious Sea
author img

By

Published : May 20, 2020, 4:27 PM IST

ஆம்பன் புயல் காரணமாக, நாகை மாவட்டத்தில் 2-ஆம் எண் புயல்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தரங்கம்பாடி வட்டப்பகுதியில், கடலோரப் பகுதி மற்றும் மீனவ கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. சந்திரப்பாடி மீனவ கிராமத்தில் கடல் சீற்றத்தால், அலையின் வேகம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் கடல் நீர் கரையைக் கடந்து, உட்புகுந்து வருகிறது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், "சந்திரப்பாடியில் 700-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் 450 ஃபைபர் படகுகள், 50 கட்டுமரங்கள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கடல்நீர் கரையைக் கடந்து ஊருக்குள் புகுவதால், கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகள் சேதமடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இயற்கைப் பேரிடர் காலங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால், கரை அரிப்பு ஏற்படுகிறது. இதனால், சந்திரப்பாடி ஊராட்சிப் பகுதியில் கருங்கல் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும்" என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சந்திரப்பாடி மீனவ கிராமத்து மக்கள்

இது தொடர்பாக தரங்கம்பாடி வட்டாட்சியர் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர் சிவராமகிருஷ்ணன், ஊராட்சிமன்றத் தலைவர் பிரமிளா, அரசு அலுவலர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் கடல் சீற்றத்தால் அப்பகுதி மீனவர்கள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:கரையைக் கடக்கும் ஆம்பன் புயல்: துரித தகவல்கள் உடனுக்குடன்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.