மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் இந்த கல்வியாண்டில் 1000 மாணவர்களைச் சேர்த்து, அவர்களுக்கு இலவச கல்வி வழங்க தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆணை பிறப்பித்துள்ளார்.
விஜயதசமி நாளன்று இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதற்காக இன்று (அக். 8) பள்ளி அருகில் உள்ள அகரஅன்னவாசல், அரும்பூர், கழனிவாசல், விளநகர், மணக்குடி கிராமங்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமையில் ஆசிரியர்கள் சென்று துண்டுப்பிரசுரங்களை வழங்கி பெற்றோருக்குத் தெரிவித்தனர்.

மேலும், தருமபுரம் ஆதீனத்தால் மாணவர்கள், பெற்றோருக்கு வழங்கப்படும் நல உதவிகள், தமிழ்நாடு அரசு வழங்கும் உதவிகள் பற்றி ஒலிப்பெருக்கி மூலம் விளக்கப்பட்டது. மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க பள்ளி நிர்வாகத்தினர் மேற்கொண்ட இந்த முயற்சியை கிராம மக்கள் வியந்து பாராட்டினர்.

இதையும் படிங்க: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி