மார்ச் மாதம் சமய மாநாட்டிற்குச் சென்றவர்களில் சிலருக்கு கரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டதால், அம்மாநாட்டிற்குச் சென்றவர்கள் தாமாகவே முன்வந்து பரிசோதித்துக் கொள்ளவேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து, நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் இருந்து 12 பேர் தாமாக முன்வந்து, பரிசோதனை செய்துகொண்டனர்.
இவர்கள், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையிலுள்ள கரோனா சிகிச்சை வார்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். தற்போது, மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில், நான்கு பேருக்கு கரோனா பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜசேகர் தலைமையில், நான்கு பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: 30 ஆயிரம் உடல் கவசங்கள் தயாரிப்பு - முதற்கட்ட பணி முடிந்தது!