நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா சின்னகொக்கூரில் விஜயகுமார் என்பவரின் இறுதி ஊர்வலத்தில் பூ வீசும் போது சரவணன், ராமச்சந்திரன் என்ற இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து சரவணன் இரவு அவரது நண்பர் சதீஷ் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது ராமச்சந்திரன் தனது நண்பர்களான செந்தில்குமார், மாதவன், ரஞ்சித் ஆகியோரை அழைத்துவந்து மீண்டும் தகராரில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த ராமச்சந்திரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரவணனை குத்தியுள்ளார். அதில் படுகாயமடைந்த சரவணன், குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தார்.
அதன்பின் அவரது உடல் கூறாய்விற்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பாலையூர் காவல் துறையினர் ராமச்சந்திரன், செந்தில்குமார், மாதவன், ரஞ்சித் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதையும் படிங்க: மதுபோதையில் கட்டட தொழிலாளி கொலை - ஒருவர் கைது!