ETV Bharat / state

ஃபிட் இந்தியா திட்டம் - தமிழ்நாட்டில் கலக்கிய சைக்கிள் பேரணி! - people eagerly to join cycle awareness rally

தமிழ்நாட்டில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் ஃபிட் இந்தியா திட்டத்தின்கீழ், சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் என ஏராளமானோர் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.

fit
ஃபிட் இந்தியா திட்டம்
author img

By

Published : Jan 19, 2020, 1:18 PM IST

நாகப்பட்டினம்:

மத்திய அரசு அறிவித்துள்ள 'ஆரோக்கிய இந்தியா' திட்டத்தின்கீழ், செம்பனார்கோவில் ஒன்றியம் மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராமவாசிகள், மகளிர் சுயஉதவிக்குழுவினர், மாணவர்கள் என திரளானோர் கலந்துகொண்டனர். மேலும், உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு போன்றவற்றை வலியுறுத்தி சைக்கிளில் பதாகைகள் கட்டிச் சென்றனர்.

நாகப்பட்டினம்

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 'ஆரோக்கிய இந்தியா' விழிப்புணர்வு பேரணி நடத்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டார். இதையடுத்து கரும்பாட்டூர், பஞ்சலிங்கபுரம், மகாராஜபுரம், சாமித்தோப்பு உள்ளிட்ட ஊராட்சிகளில் தலைவர்கள் சைக்கிள் ஓட்டி பேரணியைத் தொடங்கி வைத்தனர். இந்த சைக்கிள் பயணங்களில் திரளான பொதுமக்கள், ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஃபிட் இந்தியா இயக்கத்தின் சார்பில் தொருவளூர் முதல் பேராவூர் வரையிலான 8️ கிலோமீட்டர் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், தொடக்கி வைத்து சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டார்.

ராமநாதபுரம்

திருவாரூர்:

திருவாரூரில் அம்மையப்பன் ஊராட்சி அலுவலகம் முன்பாக கொரடாச்சேரி ஒன்றிய துணை பெருந்தலைவர் பாலச்சந்திரன் தலைமையில், சைக்கிள் பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பேரணியை திமுக மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

திருவாரூர்

கரூர்:

கரூரில் நேரு யுவகேந்திரா கணக்காளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் ஜெரால்டு தலைமையில் 'ஆரோக்கிய இந்தியா' என்ற தலைப்பில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 15 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கரூர்

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஃபிட் இந்தியா திட்டத்தின் சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சியர் கிரன்குராலா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும், ஆட்சியர் மாணவர்களோடு இணைந்து சைக்கிளை ஓட்டிச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கள்ளக்குறிச்சி

இதையும் படிங்க: கோவையில் விரைவில் தேசிய அளவிலான சைக்கிள் பந்தயம்

Intro:மத்திய அரசு அறிவித்துள்ள ஆரோக்கிய இந்தியா திட்டத்தின்கீழ், செம்பனார்கோவில் ஒன்றியம் மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் சைக்கிள் பேரணிBody:மத்திய அரசு அறிவித்துள்ள ஆரோக்கிய இந்தியா திட்டம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ஜனவரி 18-ஆம் தேதியான இன்று அனைத்து ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டது. நாகை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் ஆரோக்கிய இந்தியா திட்டத்தின்கீழ் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் தேவி சுரேஷ் துவக்கி வைத்தார். இப்பேரணியில், உடல்திறனை வளர்த்து கொள்ள வேண்டும், உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு போன்றவற்றை பின்பற்ற வலியுறுத்தி சைக்கிளில் பதாகைகள் கட்டி சென்றனர். ஊராட்சிமன்ற உறுப்பினர்கள், கிராமவாசிகள், மகளிர் சுயஉதவிக்குழுவினர், மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்துகொண்டு, சுமார் 2 கி.மீட்டர் தொலைவுக்கு சைக்கிள் ஓட்டிச்சென்றனர்.

பேட்டி:- தேவி - ஊராட்சி மன்ற தலைவர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.