நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சின்னமேடு மீனவ கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி கடற்கரையில், கடந்த சில ஆண்டுகளாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், புயல் காலங்களில் கடல் நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகிறது.
இதனால், அப்பகுதியில் கருங்கற்களால் ஆன தூண்டில் வளைவு அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், நிவர் புயல் இன்று (நவ.25) நள்ளிரவுக்கு மேல் கரையை கடக்கவுள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் காலையிலிருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால், கடற்கரையோர மீனவ கிராமங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. சின்னமேடு கடற்கரையில் கடல் சீற்றம் அதிகமாகவுள்ளது. இதனால் கடற்கரையில் கரை அரிப்பு ஏற்பட்டு வருகிறது. கடற்கரைக்கு 50 மீட்டர் தொலைவில் குடியிருப்பு பகுதி உள்ளதால் மீனவர்கள் அச்சமடைந்து வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: நிவர் புயல்: முகாம்களில் முகக்கவசம், கபசுர குடிநீர் வழங்க நடவடிக்கை