கரோனா வைரஸ் காரணமாக மத்திய மாநில அரசுகளின் ஊரடங்கு உத்தரவால் நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வருகின்றனர். 25 நாட்களாக மீனவர்கள் வீட்டில் முடங்கி உள்ளதால், அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என சில நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி, ஊரடங்கு உத்தரவால் தொடர்ந்து கடலுக்குள் செல்லாமல் வருமானமின்றி வீட்டில் முடங்கிக் கிடந்த நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் பிடித்து வந்த மீன்கள் கரையில் ஏலம் விடப்பட்டன. தனி நபர் விலகலை கடைபிடித்துதான் மீன்களை ஏலத்தில் எடுக்க வேண்டுமென காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, தனி நபர் விலகலைக் கடைபிடித்து உள்ளூர் வியாபாரிகளான மீனவ பெண்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழ்நாடு மீனவர்கள்!