நாகையை அடுத்த வெள்ளபள்ளம் கிராமத்தில் நேற்று மாலை கீச்சாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு விசைப்படகுகளுடன் கடலுக்குச் சென்று, தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்துள்ளனர்.
அதனை வெள்ளப்பள்ளம் மீனவர்கள் கண்டித்துள்ளனர். இதனால், வெள்ளப்பள்ளம் மீனவர்களுக்கும் கீச்சாங்குப்பம் மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீதும், தடைசெய்யப்பட்ட வலையை பயன்படுத்துபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வெள்ளப்பள்ளம், ராமேஸ்வரம், கோடியக்கரை உள்ளிட்ட 15 கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ‘உப்பூர் அனல் மின் நிலைய பாலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்’