மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழைய மீனவ கிராமத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளை வைத்து பத்தாயிரம் மீனவர்கள் மீன்பிடித் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
அரசால் தடை செய்யப்பட்ட சீன இஞ்ஜினைக் கொண்டு அதிவேக திறனைப் பயன்படுத்தி மீன் வளத்தை அழித்துவருவதால் சிறு தொழில் செய்யும் மீனவர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு தடை செய்யப்பட்ட சீன இஞ்சின் பயன்படுத்தும் படகுகளை பறிமுதல் செய்து மீன் வளத்தைக் காக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை மனு அளித்தும் மீன்வளத்துறை அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மீனவர்கள் நாகை மாவட்ட மீன்வளத்துறை அலுவலர்களைக் கண்டித்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தமிழ்நாடு அரசு சீன இஞ்ஜினை முற்றிலுமாகத் தடை செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.