ETV Bharat / state

நடுக்கடலில் மீன் குழம்பு ருசித்த மீனவர்கள் - வைரலாகும் வீடியோ! - வைரலாகும் வீடியோ

நாகப்பட்டினம்: ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் மீன் குழம்பு சமைத்து சாப்பிடும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.

nagai fishermen
author img

By

Published : Oct 2, 2019, 3:33 PM IST

Updated : Oct 2, 2019, 4:13 PM IST

நம் நாட்டில் சமவெளிக்குள் வாழும் மக்களுக்கு கடல் மீன்களைத் தெரியும். ஆனால் மீனவர்களின் வாழ்வியலை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடலுக்குள் மீன் பிடிக்க செவல்பவர்களின் சிலரது வாழ்க்கை முடிந்தால் முடியும், தொடர்ந்தால் தொடரும் என்ற நிலையில் தான் இருக்கிறது.

மீனவர்களின் எதார்த்த வாழ்க்கையை அலசி ஆராய்ந்தால் நமது வாழ்க்கையில் தொலைத்த மகிழ்ச்சியை அவர்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். கண்ணீர், மகிழ்ச்சி, ஆட்டம் பாட்டம் நிறைந்த கொண்டாட்டமும் இருக்கிறது. அப்படித்தான் இந்த நிகழ்வும் பார்ப்பவரை பெருமகிழ்ச்சியடைய வைக்கிறது. மீனவர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்கின்றனர். அவ்வாறு கூட்டம் கூட்டமாக செல்லும் மீனவர்கள் நாள் கணக்கில் தங்கி ஆழ்கடலுக்குள் மீன்பிடித்து வருகின்றனர்.

ஆழ் கடலில் மீன் குழம்பு

இந்நிலையில், நாகப்பட்டினம் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற இடத்தில் சாப்பாடு சமைத்து, தாங்கள் பிடித்து வைத்த மீனை நாக்கிற்கு சுவை தரும் குழம்பாக சமைத்து உணவருந்திய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Intro:ஆழ்கடலில் மீன் குழம்பு சமையல் வீடியோ - நாவில் எச்சில் ஊறுவதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவு.Body:ஆழ்கடலில் மீன் குழம்பு சமையல் வீடியோ - நாவில் எச்சில் ஊறுவதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவு.

தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது நான்கு நாட்கள் ஏழு நாட்கள் மற்றும் 15 நாட்கள் வரை ஆழ்கடல் மீன்பிடிப்பு மூலம் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். நீண்ட நாட்கள் தங்கி மீன்பிடிப்பதால் ஊரில் இருந்து அரிசி ,சிலிண்டர், தண்ணீர், மளிகைப் பொருட்களை உள்ளிட்டவைகளை எடுத்துக் கொண்டு படகில் சமைத்து சாப்பிடுகின்றனர்.

இந்நிலையில் நாகை மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்று மாலை வெகு நேரமாகியும் போதிய மீன் கிடைக்காததால் கடலில் தங்கி மீன் பிடிப்பதற்காக முடிவு செய்து தங்கள் எடுத்துச்சென்ற அரிசி மற்றும் மளிகை பொருட்களை கொண்டு உணவு தயாரித்து தாங்கள் பிடித்த மீனை சமைத்து அனைவரும் பகிர்ந்து உண்ணுவதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட அது தற்போது வைரலாக பரவி வருகிறது. அவர்கள் படகில் சமைத்து உண்ணும் வீடியோவை பார்க்கும் பலருக்கும் நாவில் நீர் ஊற செய்வதாக பதிவிட்டுள்ளனர்.Conclusion:
Last Updated : Oct 2, 2019, 4:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.