நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையார் மீனவர் கிராமத்தில் மீன்பிடி வலை பயன்படுத்துவதில் மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டுவந்தது. மீன்வளத்துறை அலுவலர்கள் அதிகதிறன் கொண்ட எஞ்ஜின், சுருக்கு மடி வலை பயன்படுத்தும் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதித்துள்ளனர். இந்தத் தடையால் அதிவேக திறன்கொண்ட விசைப்படகை பயன்படுத்தும் மீனவர்கள் ஐந்து மாதங்களாக மீன்பிடிக்கச் செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். அரசுத் தரப்பில் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அந்த தீர்மானத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்கப் போவதாகவும், அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக வீடுகளில் கறுப்புக்கொடி கட்டியும் தங்களது சட்டைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை வெளிக்காட்டவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரம் பேர் வாக்களிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாரான திமுக: அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்த காங்கிரஸ் நிர்வாகிகள்!