ETV Bharat / state

World Fishermen Day: உலக மீனவர் தினவிழா - நாகை அருகே களைகட்டிய மீனவர் நீச்சல் போட்டி

உலக மீனவர் தின விழாவை முன்னிட்டு அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் மீனவர்களுக்கிடையே கடலில் நீச்சல் போட்டி நடத்தப்பட்டு வெற்றியடைந்தவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மீனவர் நீச்சல் போட்டி தொடர்பான காணொலி
மீனவர் நீச்சல் போட்டி தொடர்பான காணொலி
author img

By

Published : Nov 22, 2021, 6:09 AM IST

நாகப்பட்டினம்: தமிழ்நாடு மீன் வளம், மீனவர் நலத் துறை சார்பில் அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்தில் நேற்று (நவம்பர் 20) உலக மீனவர் நாள் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து மீனவர்களுக்கிடையே நீச்சல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளை மீன்வளத் துறை உதவி இயக்குநர் ஜெயராஜ் தொடங்கிவைத்தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன் கலந்துகொண்டு வெற்றிபெற்றோருக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் கடலில் இயற்கைப் பேரிடர் ஏற்பட்டால் கடைப்பிடிக்க வேண்டிய தற்காப்பு நடைமுறைகள் குறித்து மீனவர்களுக்கு, தீயணைப்பு வீரர்கள் பயிற்சி அளித்தனர்.

மீனவர் நீச்சல் போட்டி தொடர்பான காணொலி

இதேபோல் கடலில் இருக்கும்போது மாரடைப்பு அல்லது விபத்துகள் ஏற்பட்டால் முதலுதவி அளித்து, மீனவரைப் பத்திரமாக கரைக்கு அழைத்துவருவது குறித்தும் அரசு மருத்துவர்கள் மீனவர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.

அப்போது ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பாக, ஐம்பதுக்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு ஜிபிஎஸ் (இருப்பிடம் காட்டும்) கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்குப் பின்னர் மீன்வள வளர்ச்சிக் கழகத் தலைவர் பேசுகையில், “கடல், மீன்வளத்தைப் பாதுகாக்க மீனவர்கள் பாலித்தீன் பைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து மாசற்ற கடலை உருவாக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: அமெரிக்காவில் பண மழை.. வெள்ளிக்கிழமை அதிகாலை கண்ணை திறந்த லட்சுமி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.