ETV Bharat / state

தரங்கம்பாடியில் மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் துறையினர் ஆய்வு! - சுருக்குமடி வலைக்கு அனுமதி

தரங்கம்பாடி மீனவ கிராமங்களில், மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் முறையாக கடைபிடிக்கப்படுகிறாதா என்று கடலோர அமலாக்கப் பிரிவு, மீன்வளத்துறை, கடலோர காவல்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

கடலோர காவல் துறையினர் ஆய்வு
கடலோர காவல் துறையினர் ஆய்வு
author img

By

Published : Jul 20, 2021, 5:36 PM IST

மயிலாடுதுறை: பூம்புகார், மடவாமேடு, திருமுல்லைவாசல், சந்திரபாடி உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சுருக்குமடி வலைக்கு அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில், மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983 படி, 21 விதிகளை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மீனவர்கள் நேற்று (ஜூலை 19) தங்களது குடியுரிமை ஆவணங்களை அரசிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் மீனவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க முடியாது என்றும், 1983ஆம் ஆண்டு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் 21 விதிகளையும் முழுமையாக அமல்படுத்தபடும், விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்ததார்.

அதன்படி, இன்று (ஜூலை 20) தரங்கம்பாடி மீனவர் கிராமத்தில் மீன்வளத்துறை ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில், கடலோர அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் அடங்கிய குழுவினர் விசைப்படகுகள், பைபர் படகுகள், படகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களின் திறன் மற்றும் வலைகளின் அளவுகள் குறித்து ஆய்வு நடத்தினர். தொடர்ந்து சின்னங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: சுருக்கு மடி வலை விவகாரம்- மீனவர்கள் போராட்டம் வாபஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.