ETV Bharat / state

குடியிருப்புக்கு அருகில் உள்ள குப்பைக் கிடங்கால் அபாயம்!

நாகை: மயிலாடுதுறை நகராட்சி குப்பைக் கிடங்கில் இருந்து வெளிவரும் புகை மூட்டத்தால் குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குப்பை கிடங்கால் பொதுமக்கள் அவதி
author img

By

Published : Apr 21, 2019, 12:32 PM IST

நாகை மாவட்டம், மயிலாடுதுறை, ஆனந்த தாண்டவபுரம் சாலையில் நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் இருந்து அள்ளப்படும் குப்பைகள் இங்குதான் கொட்டப்படுகின்றன.

மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள இக்குப்பைக் கிடங்கால் இப்பகுதி மக்களுக்கு சுகாதாரச் சீர்கேடு, தோல் நோய் உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இக்கிடங்கில் உள்ள குப்பைகள் அடிக்கடி தீயிட்டுக் கொளுத்தப்படுகிறது. கடந்த ஐந்து நாட்களாக குப்பைகள் எரிந்து அதிலிருந்து வெளியே வரும் புகையினால் இப்பகுதி மக்கள் கடுமையான மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சல் பிரச்னைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

புகையால் குழந்தைகள் கடுமையான காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தும் குப்பைக் கிடங்கை இப்பகுதியில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குப்பைக் கிடங்கால் பொதுமக்கள் அவதி

Intro: மயிலாடுதுறை நகராட்சி குப்பை கிடங்கில் கடந்த 5 நாட்களாக குப்பை தீப்பற்றி எரிவதால், அதிலிருந்து வெளிவரும் புகை மூட்டத்தால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதி. உடனடியாக புகையை கட்டுப்படுத்த கோரிக்கை

Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் ஆனந்ததாண்டவபுரம் சாலையில் உள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் இருந்து அள்ளப்படும் குப்பைகள்இக்கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இக் குப்பை கிடங்கால் இப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு, சரும நோய் உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இக்கிடங்கில் உள்ள குப்பைகள் அடிக்கடி தீயிட்டு கொளுத்தபடுகிறது. கடந்த 5 நாட்களாக குப்பைகள் எரிந்து அதிலிருந்து உண்டாகும் புகையினால் இப்பகுதி மக்கள் கடுமையான மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சல் பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளனர். புகையால் குழந்தைகள் கடுமையான காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தும் குப்பை கிடங்கை இப்பகுதியில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி : 1, விஜயா. 2,கனகராஜ்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.