ETV Bharat / state

மயிலாடுதுறையில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் - Full sum insured for affected farmers

மயிலாடுதுறையில் கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணத்தொகை வழங்கும் பணியை அமைச்சர் மெய்யநாதன் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

மயிலாடுதுறையில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம்

author img

By

Published : Jan 6, 2023, 8:33 PM IST

மயிலாடுதுறையில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம்

மயிலாடுதுறையில் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் கடந்த நவம்பர் மாதம் 11ஆம் தேதி பெய்த அதீத கனமழையால் பாதிக்கப்பட்ட 32 ஆயிரத்து 533 ஹெக்டேர் பயிர்களுக்கு, ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 நிவாரணம் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரூ.43 கோடியே 92 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட 40 ஆயிரம் விவசாயிகளுக்கு இந்த தொகை வழங்கும் பணி இன்று தொடங்கியது. சீர்காழி அருகே கடவாசல் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை அமைச்சருமான மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் லலிதா, சீர்காழி மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தனர்.

இதன்மூலம் சீர்காழி தாலுகாவில் பாதிக்கப்பட்ட 22,220 ஹெக்டேர் விளைநிலங்களுக்குரிய 25,142 விவசாயிகள் ரூ.29 கோடியே 97 லட்சம் இழப்பீடு தொகையும், தரங்கம்பாடி தாலுகாவில் பாதிக்கப்பட்ட 8,000 ஹெக்டேர் விளைநிலத்திற்குரிய 9,736 விவசாயிகளுக்கு ரூ.10 கோடியே 80 லட்சம் இழப்பீடு தொகையும் வழங்கப்படவுள்ளது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது, 'மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மற்றும் தரங்கம்பாடியில் கடந்த நவம்பர் மாதம் 11ஆம் தேதி பெய்த அதீத கனமழையால் பாதிக்கப்பட்ட 32 ஆயிரத்து 533 ஹெக்டேர் பயிர்களுக்கு, ஹெக்டேர் ஒன்றுக்கு 13,500 ரூபாய் நிவாரணம் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரூ.43 கோடியே 92 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட 40 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிது. அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பாதிப்புகள் குறித்து முழுமையாக கணக்கெடுப்பு நடத்தியபின், இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு காப்பீடு தொகை கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் யாரேனும் விடுபட்டிருந்தாலும் அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும்' என உறுதியளித்தார்.

இதையும் படிங்க:"நீ கருப்பாக இருப்பதால் உனக்கு சாமி கும்பிட அனுமதி இல்லை" கோயிலில் நடந்த கொடூர சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.