மயிலாடுதுறை: டெல்டா மாவட்டங்களில் தொடர்மழை பெய்துவருகிறது. ஏற்கனவே நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்டிருக்கு விவசாயிகளுக்கு இந்தத் தொடர் மழை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
பலத்த மழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் டிசம்பர் 17ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விவசாயிகள் பாதிப்பு
டெல்டா மாவட்டமான மயிலாடுதுறையில் நேற்று (டிசம்பர் 16) முதல் மீண்டும் தொடர்ந்து பரவலாக பெய்துமழை வருகிறது. மாவட்டத்தில் உள்ள குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி, மணல்மேடு, செம்பனார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாகப் பெய்துவருகிறது.
ஏற்கனவே நிவர், புரெவி புயலால் விளைநிலம் நீரில் மூழ்கியது. தற்போது மழைநீர் வடிந்துவரும் நிலையில் மீண்டும் மழை பெய்துவருவதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: பாம்பன் பாலத்தை கடந்த கப்பல்கள்!