ETV Bharat / state

பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை அதிகாரிகள் பார்வையிட வராததால் விவசாயிகள் சாலை மறியல் - farmers protest near seerkazhi

சீர்காழி அருகே பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை அதிகாரிகள் பார்வையிட வராததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை அதிகாரிகள் பார்வையிட வராததால் விவசாயிகள் சாலை மறியல்

author img

By

Published : Nov 4, 2022, 11:00 PM IST

நாகப்பட்டிணம்: சீர்காழி அருகே தென்னாம்பட்டினம், திருமுல்லைவாசல் பகுதிகளில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பார்வையிடுவதாக கூறியிருந்த நிலையில் அவர்கள் அந்த பகுதிக்கு வராததால் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் சூழ்நிலை குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது.

இதன் காரணமாக சீர்காழி தாலுகா பகுதியில் 30,000 ஏக்க நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளன. நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு செய்து 25 நாட்களே ஆன இந்த பயிர்கள் நீரில் முழுகி உள்ளதால் முற்றிலும் பாதிப்படைய கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதே போல சீர்காழி நகர் பகுதி மற்றும் பூம்புகார் சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளைச் சுற்றி மழைநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனருமான அமுதவள்ளி மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா உள்ளிட்டோர் வருகை புரிந்தனர்.

முதலில் பூம்புகார் ராதா நல்லூர் பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து பூம்புகார் சுனாமி குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்த குடியிருப்புகளை பார்வையிட்ட அவர் அங்கு தண்ணீர் வடிவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் அதனை பார்வையிட்டார்.

தொடர்ந்து தென்னாம்பட்டினம், திருமுல்லைவாசல் பகுதியில் பயிர் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள வருவதாக அதிகாரிகள் கூறியதால் விவசாயிகள் காலை 9மணியிலிருந்து காத்திருந்தனர். அந்த பகுதிக்கு மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வராததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கையில் பாதிக்கப்பட்ட பயிர்களை வைத்துக்கொண்டு திருமுல்லைவாசல் - சீர்காழி சாலையில் வழுதலைக்குடி பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மழையால் நீரில் மூழ்கிய 10 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் விவசாயிகள் கவலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.