நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
இதனால் விவசாயிகள் பல்வேறு கிராமங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கூத்தூர் கிராம விவசாயிகள் அழுகிய நெற்பயிர்களுடன் இன்று (ஜன.18) வயலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
அப்போது பாதித்த நெற்பயிர்களை இதுவரை கணக்கெடுப்பு நடத்தாத அலுவலர்களை கண்டித்தும், விரைந்து நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: செடியிலேயே முளைத்த பயிர்கள்: பெண்கள் ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டம்