ETV Bharat / state

மயிலாடுதுறையில் விவசாய நிலங்களை சேதப்படுத்திய கெயில் நிறுவனம் - சேற்றை பூசி போராட்டம் - சேற்றை பூசி போராட்டம்

நாகை: மயிலாடுதுறை அருகே குறுவை நடவு செய்த வயலில் பொக்லைன் இயந்திரம் கொண்டு கெயில் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடலில் சேற்றைப் பூசிக் கொண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
author img

By

Published : May 17, 2019, 11:38 AM IST

நாகை மாவட்டம் மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு கெயில் நிறுவனம், எண்ணெய் எரிவாயு எடுத்துச் செல்வதற்காக குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் மேமாத்தூர், காலகஸ்திநாதபுரம் பகுதியில் குறுவை சாகுபடிக்கு விதைவிட்டு உழவு செய்த வயல்களில் குழாய் பதிப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து காவல் துறையினரிடம் புகார் மனு அளித்தனர்.

இந்நிலையில், முடிகண்டநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பாலு, மோகன்தாஸ், சிவானந்தம் ஆகியோர் தங்கள் வயல்களில் குறுவை நடவு பணிகளை செய்துள்ளனர். பயிர்கள் வளர வேண்டிய நிலையில் திடீரென்று கெயில் நிறுவனம் குழாய் பதிப்பதற்காக நடவு செய்த வயலில் பொக்லைன் இயந்திரத்தை இறக்கியதை அறிந்த விவசாயிகள், அப்பகுதி கிராம மக்கள் அங்கு குழித்தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தினர். பின்னர் பொக்லைன் இயந்திரம் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டது.

சேற்றை பூசி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

பின்னர் நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் இரணியன் தலைமையில் விவசாயிகள் குறுவை நடவு செய்த வயல்களில் கெயில் நிறுவனம் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடலில் சேற்றைப் பூசிக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கெயில் நிறுவனம் விவசாயத்தை அழித்து குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்வதை தமிழ்நாடு அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:மயிலாடுதுறை அருகே குறுவை நடவு செய்த வயலில் பொக்லைன் இயந்திரம் கொண்டு கெயில் குழாய் பதிப்பு. தடுத்து நிறுத்தி உடலில் சேற்றைப் பூசிக் கொண்டு விவசாயிகள் போராட்டம்:-

Body:நாகை மாவட்டம் மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு கெயில் நிறுவனம் எண்ணெய் எரிவாயு எடுத்துச் செல்வதற்காக குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மேமாத்தூர், காலகஸ்திநாதபுரம் பகுதியில் குறுவை சாகுபடிக்கு விதைவிட்டு மற்றும் உழவு செய்த வயல்களில் குழாய் பதிப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகார் மனு அளித்தனர். இந்நிலையில் முடிகண்டநல்லூர் கிராமத்தில் விவசாயிகள் பாலு, மோகன்தாஸ், சிவானந்தம் ஆகியோர் தங்கள் வயல்களில் குறுவை நடவு பணிகளை செய்து சில நாட்களாகிறது. பயிர்கள் வளர வேண்டிய நிலையில் திடீரென்று கெயில் நிறுவனம் குழாய் பதிப்பதற்காக நடவு செய்த வயலில் பொக்லைன் இயந்திரத்தை இறக்கி கொண்டு சென்றுள்ளனர். இதனை அறிந்த விவசாயிகள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் பொக்லைன் இயந்திரம் குழித்தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தினர். அதனையடுத்து நடவு செய்த வயலில் கூழிதோன்டாமல் இயந்திரத்தை அங்கிருந்து எடுத்து சென்றனர். நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் இரணியன் தலைமையில் விவசாயிகள் குறுவை நடவு செய்த வயல்களில் கெயில் நிறுவனம் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடலில் சேற்றைப் பூசிக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயத்தை அழித்து கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்வது தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி பாலு விவசாயி.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.