ETV Bharat / state

மதுப்பாட்டில் மாலை... கையில் மண் சட்டி..! - நாகை தொகுதி வேட்பு மனுத்தாக்கலில் ருசிகரம்!

author img

By

Published : Mar 21, 2019, 11:08 PM IST

நாகை: டாஸ்மாக் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கண்டித்து, மது பாட்டில்களை மாலையாக அணிந்து, கையில் மண் சட்டி ஏந்தியபடி விவசாயிகள் இரண்டு பேர் மயிலாடுதுறையில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனுத்தாக்கல்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இரண்டு விவசாயிகள் சுயேட்சைகளாக வேட்புமனுத் தாக்கல் செய்தனர். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். டாஸ்மாக் மதுபான கடைகளை தடை செய்ய வேண்டும். ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று அச்சிடப்பட்டிருந்த பதாகைகளையும், காலி மதுபாட்டில்களையும் கழுத்தில் அணிந்தும், மண் சட்டியை கையில் ஏந்தியவாறும் வந்து மயிலாடுதுறை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவினை தாக்கல் செய்தனர்.

மேலும் தங்கள் அமைப்பு சார்பில் இந்த தேர்தலில் மயிலாடுதுறையில் மட்டும் நூறு பேர் போட்டியிட உள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் விரைவில் வேட்புமனுவினை தாக்கல் செய்வார்கள் என்றும் அதிரச் செய்தனர்.

Intro:டாஸ்மாக் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை கண்டித்து, மது பாட்டில்களை மாலையாக அணிந்தும், கையில் மண் சட்டி ஏந்தியும் விவசாயிகள் இரண்டு பேர் மயிலாடுதுறையில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Body:டாஸ்மாக் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை கண்டித்து, மது பாட்டில்களை மாலையாக அணிந்தும், கையில் மண் சட்டி ஏந்தியும் விவசாயிகள் இரண்டு பேர் மயிலாடுதுறையில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும், டாஸ்மாக் மதுபான கடைகளை தடை செய்ய வலியுறுத்தியும், ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களை தடை செய்ய கோரியும் நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று விவசாயிகள் இரண்டு பேர் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் மனு தாக்கல் செய்தனர். இந்த திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய பாஜக அரசு, அதற்கு துணைபுரியும் தமிழக அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தியும் கையில் மண் சட்டி ஏந்தியபடி கழுத்தில் காலி மது பாட்டில்களை மாலையாக அணிந்து ஊர்வலமாக வந்த விவசாயிகள் நாகை மாவட்டம் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய மாநில அரசுகளின் இந்தத் திட்டங்களால் விவசாயிகள் கையில் திருவோடு ஏந்தி நிலை விரைவில் ஏற்படும் என்பதை உணர்த்தவே கையில் மண் சட்டி ஏந்தி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

பேட்டி : ராஜா (மனு தாக்கல் செய்த விவசாயி)

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.