ETV Bharat / state

திருட்டுக்கு பயந்து பறக்கும் படையினரிடம் நகைகளை பறிகொடுத்த குடும்பம்! - nagapattinam latest news

சீர்காழி அருகே திருட்டுத் தொல்லைக்கு பயந்து காரில் கழட்டி வைக்கப்பட்ட ஆவணங்களில்லாத 30 சவரன் தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திருட்டுத் தொல்லைக்கு பயந்து தேர்தல் அலுவலர்களிடம் சிக்கிக் கொண்ட குடும்பம்!

author img

By

Published : Mar 17, 2021, 8:52 AM IST

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, எருக்கூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காரை அலுவலர்கள் சோதனையிட்டனர். சோதனையில் உரிய ஆவணங்களில்லாத 30 சவரன் தங்க நகைகள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து அலுவலர்கள் மேற்கொண்ட விசாரணையில், காரை ஓட்டி வந்த நபர் மயிலாடுதுறையைச் சேர்ந்த ஆரோக்கியசகாயம் என்பது தெரியவந்தது. சென்னையில் நடைபெற்ற உறவினர் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டு, ஊர் திரும்பும் போது பாதுகாப்புக்காக அணிந்திருந்த நகைகளை அவர்கள் காரில் கழட்டி வைத்திருக்கிறார். ஆனால், அதற்கான உரிய ஆவணங்களை அவரால் சமர்ப்பிக்க முடியவில்லை.

திருட்டுத் தொல்லைக்கு பயந்து கழட்டி வைகக்கப்பட்ட நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம், அக்குடும்பத்தினர்மீது அனைவரையும் பரிதாபம் கொள்ள வைத்துள்ளது.

இதையும் படிங்க :Ind vs Eng: பட்லர் அதிரடியில் மண்ணைக் கவ்விய இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.