ETV Bharat / state

மயிலாடுதுறையில் கள்ள நோட்டு புழக்கம்- பெண் கைது

நாகை: மயிலாடுதுறையில் கள்ள நோட்டு புழக்கத்தில் ஈடுபட்ட பெண்ணை  வியாபாரிகள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கள்ள நோட்டு
author img

By

Published : Aug 1, 2019, 9:59 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்தவர் கண்ணன், ஃபேன்சி ஸ்டோர் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சில நாட்களுக்கு முன் பெண் ஒருவர் 40 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கிக் கொண்டு 500 ரூபாய் கொடுத்து மீதி தொகையை பெற்றுச் சென்றுள்ளார். அதன்பின்னர், அப்பெண் கொடுத்த 500 ரூபாய் நோட்டு கள்ளநோட்டு என்பது அவருக்கு தெரியவந்தது. இந்நிலையில், அதே பெண் இன்று கடைக்கு பொருட்கள் வாங்க வந்துள்ளார். அப்போது, 80 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கிவிட்டு கடை உரிமையாளரிடம் 500 ரூபாய் கொடுத்துள்ளார். அது கள்ளநோட்டு என சுதாரித்துக் கொண்ட கடை ஊழியர்கள், அப்பெண்மணியை பிடித்து அவரது கைப்பையை சோதனையிட முயன்றபோது, தன் பையில் வைத்திருந்த இரண்டு 500 ரூபாய் கள்ள நோட்டுகளை கிழித்து வீசிவிட்டு தப்பி ஓட முயன்றார்.

மயிலாடுதுறையில் கள்ள நோட்டு புழக்கம்- பெண் கைது...

கடை ஊழியர்கள் அப்பெண்மணியை சுற்றிவளைத்து பிடித்து மயிலாடுதுறை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அப்பெண்மணி ஜெயலலிதா நகரை சேர்ந்த கற்பகம் என்பதும், அவரது கணவர் வெங்கடேசன் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கணவர் வெங்கடேசனை தேடி வருகின்றனர்.

Intro:மயிலாடுதுறையில் கள்ள நோட்டு புழக்கம். 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்றிய பெண்மணியை வியாபாரிகள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை வண்டிக்காரத்தெருவில் உள்ள கண்ணன் என்பவரது பேன்சி ஸ்டோருக்கு சில நாட்களுக்கு முன் வந்த பெண்மணி ஒருவர் 40 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கிக் கொண்டு 500 ரூபாய் கொடுத்து மீதி தொகையை பெற்றுச் சென்றுள்ளார். அதன்பின்னர், அப்பெண்மணி கொடுத்த 500 ரூபாய் நோட்டு கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இந்நிலையில் இன்று கடைக்கு வந்த அதே பெண்மணி 80 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கிவிட்டு கடை உரிமையாளர் கண்ணணிடம் 500 ரூபாய் கொடுத்துள்ளார். அதை பெற்றுக்கொண்டு கடை ஊழியர்கள் அப்பெண்மணியை பிடித்து அவரது கைப்பையை சோதனையிட முயன்றபோது, தன் பையில் வைத்திருந்த இரண்டு 500 ரூபாய் கள்ள நோட்டுகளை கிழித்து வீசிவிட்டு தப்பி ஓட முயன்றார். கடை ஊழியர்கள் அப்பெண்மணியை சுற்றிவளைத்து பிடித்து மயிலாடுதுறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அப்பெண்மணி ஜெயலலிதா நகரை சேர்ந்த கற்பகம் என்பதும் அவரது கணவர் வெங்கடேசன் 500 ரூபாய் கள்ள நோட்டுக்களை மாற்ற கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து மயிலாடுதுறை போலீசார் வெங்கடேசனை தேடி வருகின்றனர்.

பேட்டி : கண்ணன், கடை உரிமையாளர், மயிலாடுதுறை.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.