ETV Bharat / state

காங்கிரஸ் கட்சியினரிடையே வெடித்த கோஷ்டி மோதல்! - rajkumar

நாகை: தேர்தல் பணிகளில் சரிவர ஈடுபடாததால் நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜ்குமாரை மாற்ற வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் முன்னாள் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியினரிடையே கோஷ்டி மோதல்: திமுக கலக்கம்
author img

By

Published : Apr 1, 2019, 12:27 PM IST

நாகை மாவட்டத்தில், வடக்கு மாவட்ட தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ராஜ்குமார் தலைமையில் ஒரு அணி, முன்னாள் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் என்பவர் தலைமையில் மற்றொரு அணி என இரண்டு கோஷ்டிகள் உள்ளன.

இந்நிலையில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக பண்ணை சொக்கலிங்கம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியரால் அறிவிக்கப்பட்டார். இதற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளராக பண்ணை சொக்கலிங்கத்தை அறிவித்து கே.எஸ்.அழகிரி அறிவிப்பு வெளியிட்டார்.

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், பண்ணை சொக்கலிங்கம் தலைமையில் மயிலாடுதுறையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார் தேர்தல் பணிகளில் சரிவர ஈடுபடவில்லை. கடந்த முறை திமுக தோல்விக்கு மறைமுகமாக செயல்பட்ட அவரை மாற்ற வேண்டும். மாற்றவில்லை என்றால் காங்கிரஸ் கட்சியினர் தஞ்சை தொகுதியில் தேர்தல் பணியாற்ற மாட்டோம் என்றும் அறிவித்துள்ளனர்.

Intro:மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கோஷ்டி மோதல், கடந்த தேர்தலில் திமுக தோல்விக்கு காரணமாக இருந்த காங்கிரஸ் மாவட்ட தலைவரை மாற்ற வேண்டும் என்று எதிர்ப்பாளர்கள் கூட்டம்:-

Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காங்கிரஸ் கோஷ்டி மோதல் அதிகரித்து உள்ளது. இதனால், திமுகவினர் கலக்கமடைந்துள்ளனர். மயிலாடுதுறை தலைமையாகக் கொண்டு நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்பட்டு வருகின்றது. வடக்கு மாவட்ட தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ்குமார் பதவி வகித்து வருகின்றார். இவர் தலைமையில் ஒரு அணியும், முன்னாள் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் என்பவர் தலைமையில் ஒரு கோஷ்டியும் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக பண்ணை சொக்கலிங்கம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியரால் அறிவிக்கப்பட்டார். இதற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார் எதிர்ப்பு தெரிவிக்கவே தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளராக பண்ணை சொக்கலிங்கத்தை அறிவித்து கே.எஸ்.அழகிரி அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு காங்கிரஸில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்த ஆலோசனை கூட்டம் பண்ண சொக்கலிங்கம் தலைமையில் மயிலாடுதுறையில் நடைபெற்றது. முன்னாள் நகர தலைவர் செல்வம் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார் தேர்தல் பணிகளில் சரிவர ஈடுபடவில்லை. கடந்த முறை திமுக தோல்விக்கு மறைமுகமாக செயல்பட்டவர். அவரை மாற்ற வேண்டும் என்றும் இல்லை என்றால் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலுக்கு ஒத்துழைக்க மாட்டார்கள் என்றும் தஞ்சை தொகுதிக்கு தேர்தல் பணியாற்ற மாட்டோம் என்றும் அறிவித்துள்ளனர். இதனால் திமுகவினரும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பேட்டி : 1, இராம.சிதம்பரம் - காங்கிரஸ் முன்னோடி. 2, செல்வம் - முன்னாள் நகர தலைவர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.