நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய அவர், ”மாணவர்கள் தங்கள் திறன் மேம்பாட்டை வளர்த்துக் கொள்வதற்காகவே தொழில் நெறி விழிப்புணர்வு கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை மாணவர்கள் பயன்படுத்தி கொண்டு தங்களின் திறமையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். முயற்சிகள் இருக்கும் வரைதான் உங்கள் முன்னேற்றமும் இருக்கும். எனவே மாணவர்கள் வேலைவாய்ப்பினைப் பெற்று சமூக மாற்றத்திற்கான சாதனைகள் புரிய வேண்டும்” என்றார். இதில் திரளான கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.
.