ETV Bharat / state

யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமுக்கு அரசு ஏற்பாடு செய்யக் கோரிக்கை! - Nagapattinam district news

வருடந்தோறும் டிசம்பர் மாதம் நடைபெறும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக நடக்கவில்லை. இதனை நடத்த தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என யானைகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Nagapattinam district news  Nagapattinam district news in tamil
யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமுக்கு அரசு ஏற்பாடு செய்யக் கோரிக்கை
author img

By

Published : Jan 2, 2021, 7:18 AM IST

மயிலாடுதுறை: தமிழ்நாடு அரசின் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் வருடந்தோறும் டிசம்பர் மாதம் நடைபெறுவது வழக்கம்.

இம்முகாமில் பல்வேறு கோயில்களிலிருந்தும் யானைகள் அனுப்பிவைக்கப்படும். கோவை மாவட்டம் தேக்கம்பட்டி வனப்பகுதியில் 48 நாள்கள் நடைபெறும் இம்முகாமில் கலந்துகொள்ளும் யானைகள் உற்சாகத்துடன் காணப்படும்.

ஆனால், இந்தாண்டு கரோனா பொதுமுடக்கம் காரணமாக யானைகள் முகாமுக்கு அனுப்பிவைக்கப்படவில்லை. இதனால், மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பாள் உற்சாகம் இழந்து காணப்படுவதாகவும், தான் கூறுவதை கேட்க மறுப்பதாகவும் யானைப் பாகன் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமுக்கு அரசு ஏற்பாடு செய்யக் கோரிக்கை

"48 நாள்கள் பிற யானைகளுடன் சேர்ந்திருப்பதாலும், முகாமில் அளிக்கப்படும் பயிற்சியின் காரணமாகவும் யானைகள் ஒருவருடம் முழுவதும் உற்சாக காணப்படும். எனவே, தமிழ்நாடு அரசு யானைகள் முகாமுக்கு ஏற்பாடு செய்து தரவேண்டும்" என யானை நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: நீலகிரியில் யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.