தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் மயிலாடுதுறை கால் டாக்ஸி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர், ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் விஜயராகவன் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை எடுத்துச் செல்பவர்கள் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். உரிய ஆவணங்களை ஒப்படைத்து வருமான வரித்துறையின் விசாரணைக்குப் பிறகே பொருள்கள் ஒப்படைக்கப்படும்.
தேர்தல் விதிமீறல்கள் குறித்த புகார்களை தனி வட்டாட்சியர் விஜயராகவன் - 9092031669, வேளாண் அதிகாரி ஆர்த்தி - 9655934290, வட்டாட்சியர் தையல்நாயகி - 9444335629 ஆகியோரின் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இதையும் படிங்க : அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை