நாகை: நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி, சமத்துவபுரம், திட்டச்சேரி, கொந்தை உள்ளிட்ட பகுதிகளில் நாகை சட்டப்பேரவைத் தொகுதியின் வேட்பாளர் ஆளூர் ஷா நிவாஷை ஆதரித்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று(மார்ச் 31) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். சமத்துவபுரம் கிராமத்தில் திருமுருகன் காந்தி பேசுகையில், "மோடியா, இந்த லேடியா என்று ஜெயலலிதா கூறி வந்த நிலையில், மோடிதான் எங்கள் டாடி என்கின்றனர் எடப்பாடி பழனிசாமியின் கும்பல். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் தற்போதைய அதிமுகவினர்.
40 தொகுதிகளில் பாஜகவை வைப்புத்தொகையை இழக்கச் செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கூறினார். ஆனால், அவர் உயிரிழந்தவுடன் அதிமுகவை பாஜகவிடம் அடமானம் வைத்துவிட்டனர். அதிமுகவை காப்பாற்ற உள்ள கடைசி வாய்ப்பு அவர்களை இந்தத் தேர்தலில் தோற்படிப்பது மட்டும்தான். ஏற்கனெவே பாஜகவிடம் அதிமுகவை எடப்பாடி அடமானம் வைத்துள்ள நிலையில், வெற்றிபெற்றால் கட்சியை விற்றுவிடுவார்கள்" என்று கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: 'நான் முதலமைச்சரான பிறகு அமித் ஷா இப்படி பேச முடியுமா...' - சீமான் எச்சரிக்கை