மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் பிரசித்திபெற்ற அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. தமிழ்நாட்டில் இந்த கோயிலில் மட்டுமே ஆயுஷ் ஹோமம், மணிவிழா யாக பூஜைகள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு வந்து நேற்று(பிப்.21) சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகத்தினர் அபிராமி அம்மன் படம் மற்றும் கோயில் பிரசாதம் வழங்கினர்.
முன்னதாக கட்சி பிரமுகர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கோபூஜை, கஜபூஜை, செய்து வழிபட்டார். பின்னர் விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அவர் தரிசனம் செய்தார்.
அப்போது பொதுக்குழு உறுப்பினர் அமுர்தவிஜயகுமார், சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலாஜோதி தேவேந்திரன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கேசவன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், மற்றும் கட்சி பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
இதேபோல், சீர்காழி அருகே பிரசித்திப் பெற்ற திருவெண்காடு கோயில் தேரோட்ட விழாவில், துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தேர்த் திருவிழாவைத் தொடங்கிவைத்தார்.
இதையும் படிங்க: திருவெண்காடு தேரோட்டம்: வடம்பிடித்து இழுத்து விழாவைத் தொடங்கிவைத்த துர்கா ஸ்டாலின்!