நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு கிராமத்தில் அண்ணன், தம்பிக்கிடையே நீண்ட காலமாக முன்விரோதம் இருந்துவந்தது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட மோதலில் தம்பி செந்திலை அவரது அண்ணனான ரவி அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார்.சண்டையை தடுக்க முயன்ற இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட ஒரு இளைஞருக்கும் வெட்டு காயம் ஏற்பட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை ரவியை கைது செய்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வேதாரண்யம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சபியுல்லா பாதிக்கபட்ட குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது மூன்று குழந்தைகளுடன் கதறி அழுத செந்திலின் மனைவியை கண்ட சபியுல்லா, மூன்று குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார்.
மேலும் செந்திலின் இறுதி சடங்கிற்காக தனது பணத்தை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கினார். பொது மக்களிடம் பணம் வாங்கும் காவல் துறையினர் மத்தியில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பணம் கொடுத்து உதவிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.