ETV Bharat / state

கடுமையான வறட்சி நேரத்தில் வீணாகும் தண்ணீர்! - கூட்டுக்குடிநீர் குழாய்

நாகை: மயிலாடுதுறை அருகே கொள்ளிடம் கூட்டுக்குடிநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பாசன வாய்க்காலில் நீர் வழிந்து ஓடுவதை சரிசெய்யக் கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வறட்சி
author img

By

Published : Jun 27, 2019, 1:46 PM IST

நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் பல்வேறு இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு போர்வெல் மூலம் குழாய்கள் வழியாக மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி, நாகப்பட்டினம், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டு குடிநீர்த் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு முழுவதும் கடுமையான குடிநீர்ப் பஞ்சம் நிலவி வருவதால் தினந்தோறும் 29 ஆயிரம் லிட்டர் நீர் எடுப்பதற்கு பதில், 19ஆயிரம் லிட்டர் மட்டுமே நீர் கிடைக்கிறது.

வீணாகும் தண்ணீர்

தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இந்த நிலையில், கடுவன்குடி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக்குடிநீர்க் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக பாசன வாய்க்காலில் வழிந்தோடுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குடிநீர் வீணாவது குறித்து தொடர்ந்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உடனடியாக உடைப்பை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:மயிலாடுதுறை அருகே கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பாசன வாய்க்காலில் வழிந்து ஓடும் தண்ணீர்Body:நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு போர்வெல் மூலம் குழாய்கள் வழியாக மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி, நாகப்பட்டினம், வேதாரண்யம் தாலுக்கா பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடும் வறட்சி நிலவி வருவதால், தினமும், 29ஆயிரம் லிட்டர் தண்ணீர் எடுப்பதற்கு பதில், 19ஆயிரம் லிட்டர் மட்டுமே தண்ணீர் கிடைக்கின்றது. இதனால், குடிநீர் விநியோகம் தினசரி வழங்க முடியவில்லை. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இந்த நிலையில், குடிநீர் குழாய்களில் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் சாலையில் வழிந்தோடுகிறது. மயிலாடுதுறை அருகே கடுவன்குடி என்ற இடத்தில் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பாசன வாய்க்காலில் தண்ணீர் வழிந்து ஓடுகின்றது. கஜா புயலுக்குப்பின் மழை இல்லாமல் குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் குடிநீர் வீணாக வழிந்தோடுகிறது. சாலைகளில் தண்ணீர் தேங்கி பள்ளம் ஏற்பட்டு விபத்து ஏற்படுவதாகவும் இது குறித்து தொடர்ந்து குடிநீர் நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக உடைப்பை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி : மோகன்குமார் – பொதுமக்கள்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.