தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளுக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, கடந்த 12 ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குறித்து அவதூறாக பேசி இருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் நாகை நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
ராஜீவ் காந்தி கொலை குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது சட்ட நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
அந்த புகார் மனுவில் கட்சியினர் பெயரை குறிப்பிட்டதில் முன்னுரிமை வழங்கப்படவில்லை எனக் கூறி மாநில பொதுக்குழு உறுப்பினர்களான நவ்ஷாத் அலி மற்றும் அமிர்தராஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:ஏழு பேர் விடுதலை; ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது - தமிழ்நாடு அரசு