ETV Bharat / state

நாகையில் வெள்ள பாதிப்பு பகுதிகளைப் பார்வையிட்டு ஸ்டாலின்: காற்றில் பறந்த தகுந்த இடைவெளி!

நாகை: நாகையில் வெள்ள பாதிப்பு பகுதிகளைப் பார்வையிட்ட திமுக தலைவர், அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார்.

author img

By

Published : Dec 6, 2020, 2:40 PM IST

நாகையில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டு ஸ்டாலின்: காற்றில் பறந்த சமூக இடைவெளி!

புரெவி புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த நான்கு நாள்களுக்கும் மேலாக நாகை மாவட்டத்தில் கடும் கனமழை பெய்துவந்தது. இதனையடுத்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், தாழ்வான பகுதிகளில் பல வீடுகளில் மழைநீர் புகுந்தது.

இந்நிலையில் இன்று (டிச. 06) நாகைக்கு வருகைபுரிந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெள்ளம் பாதித்த வயல்வெளிகளைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு திமுக சார்பில் போர்வை, அரிசி உள்ளிட்ட நிவாரண பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாகையில் வெள்ள பாதிப்பு பகுதிகளைப் பார்வையிட்டு ஸ்டாலின்!

இந்த நிகழ்வில் திமுக கட்சியினர், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா அச்சுறுத்தல் சிறிதுமின்றி முகக்கவசம் அணியாமலும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமலும் ஒருவருடன் ஒருவர் முண்டியடித்த சம்பவம் கரோனா இரண்டாம் அலை நாகையில் ஏற்படுமோ? என்ற அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகப் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க...பாதுகாப்பாக வாழத்தானே வீடு கேட்கிறார்கள் பழங்குடியின மக்கள்... காப்பாற்றுமா அரசு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.