ETV Bharat / state

’காங்கிரஸ்ஸை மட்டுமல்ல, திமுகவையும் ஒழிக்க முயற்சி செய்கிறோம்’ - சீமான்

மயிலாடுதுறை : நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பேசிய சீமான், “காங்கிரஸ்ஸை மட்டுமல்ல, திமுகவையும் ஒழிக்க முயற்சி செய்கிறோம்” என்றார்.

சீமான் விமர்சனம்
சீமான் விமர்சனம்
author img

By

Published : Mar 28, 2021, 12:16 PM IST

மயிலாடுதுறை மாவட்டம், சின்னக்கடை வீதியில் மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் கி.காசிராமனை ஆதரித்து சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “எல்லோரும் கல் மாவில் கோலமிட்டபோது, அரிசி மாவில் கோலமிட்டு எறும்பு போன்ற சிற்றுயிர்களுக்கு உணவளித்தவன் தமிழன். வீட்டு வாசலில் நாயைக் கட்டி வைத்தவர்களுக்கு மத்தியில் வாசலில் திண்ணையைக் கட்டி வைத்தவன் தமிழன். இந்தத் தேர்தல் பலருக்கும் தேர்தல் களம். நாம் தமிழருக்கு போர்க்களம். அரை நூற்றாண்டாக நடைபெற்ற தீய ஆட்சியை விலக்கி தூய ஆட்சியை மலரச் செய்ய, பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை மலரச் செய்ய நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர் விற்பனைக்கு இல்லை எனும் சட்டத்தை முதல் நாளிலேயே நிறைவேற்றுவோம். அரசியல் பேரியக்கத்தில் சுற்றுச்சூழலுக்கு என்று தனியாக பாசறையைத் தொடங்கிய கட்சி நாம் தமிழர் கட்சி. தற்போது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு திமுக சுற்றுச்சூழல் பாசறையைத் தொடங்கியுள்ளது. நாங்கள் சுற்றுச்சூழல் பாசறையைத் தொடங்கியதே, சுற்றுச்சூழலை திமுகவினரிடம் இருந்து பாதுகாக்கதான். ஆட்சிக்கு வரும் முன்னரே தூய குடிநீர் மக்களுக்கு முறையாக வழங்கி சாதித்துக் காட்டியவர் வேட்பாளர் கி.காசிராமன்.

சீமான் விமர்சனம்

மக்கள் நீங்கள் ஒவ்வொருவரும் ’விவசாயி’ சின்னத்திற்கு ஒரு வாக்கினை மட்டும் அளியுங்கள். நாட்டை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆட்சிக்கு வந்தவுடன் படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை. படிக்காதவர்களே இல்லை என்பதை ஏற்படுத்துவதே அடுத்த வேலை. உலக அளவில் கல்வியில் முதல் இடத்தில் உள்ள தென்கொரியாவுடன் போட்டியிடும் அளவுக்கு ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை உலக தரத்தில் இலவசக் கல்வி வழங்கப்படும். ஆட்சி அமைந்தவுடன் பெண்கள், குழந்தைகள், வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும்.

ஆடு, மாடு, தேனீ, மீன் வளர்ப்பு என மக்களின் வாழ்விடங்களிலேயே வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, கிராமங்களில் இருந்து மக்கள் நகரங்களில் குவிவதைத் தடுத்து, கிராமங்களில் வளர்ச்சியை ஏற்படுத்துவேன். நாம் தமிழர் ஆட்சி அமைந்தால் சென்னை, மதுரை, கோவை, கன்னியாகுமரி, திருச்சி ஆகிய இடங்களை தலைமை இடங்களாகக் கொண்டு ஐந்து தலைநகரங்களை உருவாக்குவேன். தலைநகரின் வசதிகளை அனைத்துப் பகுதிகளுக்கும் பரவலாக்குவேன். தமிழ்நாட்டில் நீட் தேர்வை ஆதரிக்கும் கட்சியும், நீட் தேர்வை எதிர்க்கும் கட்சியும் கூட்டணி சேர்ந்துள்ளது.

கச்சத்தீவை தாரை வார்த்த கட்சியும், எதிர்ப்பு தெரிவித்த கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியை ஒழிப்பதற்காக எட்டு ஆண்டுகளாகப் போராடினோம். ஈழத் தமிழர்களை கொன்று குவிக்க துணை போன ரத்தக்கரை படிந்த காங்கிரஸ் கட்சியை ஒழித்து விட்டோம். செத்த பிணமான காங்கிரசை தூக்கிக் கொண்டு அலைகிறது திமுக. அதையும் ஒழிப்பதற்கு நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

மாணவர்களுக்கு வைக்கப்படும் நீட் தேர்வு போல், அரசியலில் போட்டியிடும் தலைவர்களுக்கும் தேர்வு வைக்க வேண்டும். நானும் அந்தத் தேர்வை எழுதுவேன். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தேர்வு எழுத வேண்டும். அதில் வெற்றி பெறுபவர்கள்தான் சிறந்த தலைவர்களாக இருந்து வழிநடத்த வேண்டும். பணம் இருந்தால்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையை மாற்றி நல்லவர்கள் ஆட்சி செய்ய வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க : காடுவெட்டி குருவை மருத்துவ கொலை செய்த ராமதாஸ்! - மகள் அடுக்கும் குற்றச்சாட்டுகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.